பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நாடகம் பார்க்கும் ஆர்வத்தில் பொறுப்பற்று தாய் செய்த காரியம்.! காமக்கொடூரனுக்கு இரையாகிய சிறுமி!!
திருச்சி முசிறி அருகேயுள்ள கிராமத்தில், கணவனை இழந்த நிலையில் தனது 7 வயது மகளுடன் பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக மழைவரம் வேண்டி அர்ச்சுனன் தபசு என்ற நாடகம் நடைபெற்று வந்துள்ளது.
இந்நிலையில் அந்த நாடகத்தை பார்ப்பதற்காக அந்த பெண் தனது மகளுடன் சென்றுள்ளார் .பின்னர் சிறிது நேரத்தில் சிறுமி தூங்கியதால்,அவரை வீட்டிற்கு அழைத்து வந்த அவர், சிறுமியை வீட்டின் திண்ணையிலேயே படுக்க வைத்துவிட்டு மீண்டும் நாடகம் நடைபெறும் இடத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கு பிறகு சிறுமி பயத்தில் அழுதவாறே நாடகம் நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது சிறுமிகளின் உடைகளில் ரத்தகறை இருப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்த தாய் உடனடியாக அவரை தூக்கி சென்று அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர். பின்னர் அவரது உடல் நலம் மிகவும் மோசமானதை தொடர்ந்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அந்த காம கொடூரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.