மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கிருஷ்ண ஜெயந்தி உறியடி விழா.. 7 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி.!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி மேலாயக்குடி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் உரியடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் உறி அடித்த பின்பு அந்த பானையின் கயிற்றை பிடித்து அங்கிருந்த சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போதே அதன் அருகில் இருந்த மின்சார கம்பி மீது ஈரமான கயிறு மோதி மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதில் கயிற்றைப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார் நான்கு சிறுவர்களும் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தனர்.இந்த சம்பவத்தில் பரமக்குடி மணி நகரில் வசித்து வரும் முருகன் என்பவரின் 7 வயது மகன் கபினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளான்.
மேலும் படுகாயம் அடைந்த சிறுவர்கள் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.