திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தமிழ்நாட்டிலா.? 80 வயது மூதாட்டி கதற கதற பாலியல் பலாத்காரம்... 21 வயது இளைஞனுக்கு காவல்துறை வலைவீச்சு.!
தமிழ்நாட்டில் 80 வயது மூதாட்டி இளைஞர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரமூர் என்ற பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதான குகன் என்ற இளைஞன் மூதாட்டியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
மேலும் மூதாட்டியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதில் மூதாட்டி அலறை துடித்ததை தொடர்ந்து அவரது குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனைக் கண்ட அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய குகன் என்ற இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர். தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.