மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
13 வயது மாணவிக்கு பாலியல் தொலை கொடுத்த ஓட்டுனர் போக்சோ சட்டத்தில் கைது..சென்னிமலை அருகே பரபரப்பு..!
எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஓட்டுனர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஓட்டுநர் ஒருவர் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பக்கத்தில் உள்ள வெள்ளோடு நானிபாளையத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (44). ஓட்டுநரான இவர் கடந்த வியாழக்கிழமை இரவு தனியாக இருந்துள்ளார். அந்த சமயத்தில் அவரது வீட்டின் அருகே வசிக்கும் 13 வயது எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து அந்த சிறுமி பாக்கியராஜ் பற்றி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதைக் கேட்ட சிறுமியின் பெற்றோர் ஆத்திரம் அடைந்தனர். உடனே இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஓட்டுநர் பாக்கியராஜ் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது.
இதனை தொடர்ந்து பாக்கியராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து பாக்கியராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.