திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மீன் தொட்டிக்குள் தவறி விழுந்த 1 1/2 வயது குழந்தை பரிபாப பலி! அதிர்ச்சியில் உறைந்த தாய்..!
மீன் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, அம்பத்தூர் வேங்கடபுரம் பகுதியில் வசிப்பவர் யுவராஜ், இவரது மனைவி கவுசல்யா. யுவராஜ் பிளம்மிங் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் மீனாட்சி என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று கவுசல்யா வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த போது குழந்தை மீனாட்சி விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது, குழந்தை மீனாட்சியின் விளையாட்டுப் பொருள் தவறி கீழே வைக்கப்பட்டிருந்த மீன் தொட்டிக்குள் விழுந்துள்ளது. விளையாட்டுப் பொருளை எடுப்பதற்காக சென்ற மீனாட்சி தலைகீழாக மீன் தொட்டிக்குள் விழுந்தாள். இதை கவுசல்யா கவனிக்கவில்லை. வீட்டு வேலை முடிந்து, பத்து நிமிடம் கழித்து கவுசல்யா உள்ளே வந்து பார்த்த போது குழந்தை தலைகீழாக மீன்தொட்டியில் கிடந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த கவுசல்யா உடனடியாக குழந்தையை அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றார். மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அம்பத்தூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.