மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பரிகார பூஜை செய்ய வந்த மந்திரவாதி; 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பகீர் சம்பவம்...!
13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மந்திரவாதியை காவல்துறையினர் போச்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அருகேயுள்ள மேலகலுங்கடியில் வசித்து வருபவர் மணிகண்டன் (35). இவர் வீடுகளில் தோஷம் நீக்குவது, பரிகார பூஜைகள் செய்வது, மாந்தரீகம் போன்றவை செய்து வந்துள்ளார்.
தொழிலாளி ஒருவர் பள்ளிகளைப் பகுதியில் வசித்து வருகிறார் அவர் தன் மனைவி அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுவதால் மந்திரவாதியை சென்று பார்த்துள்ளார். அபபோது வீட்டில் சில பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என மந்திரவாதி மணிகண்டன் கூறியுள்ளார்.
இதனால் மந்திரவாதி மணிகண்டன் தொழிளாளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, 8-ஆம் வகுப்பு படிக்கும் தொழிலாளியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதைப்பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று அந்த சிறுமியை மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், திடீரென அந்த சிறுமிக்கு வயிற்று வலி வந்ததால் சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர் சிறுமி நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி, மந்திரவாதி மணிகண்டன் தன்னை பலாத்காரம் செய்ததாகவும், இது பற்றி யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் சிறுமி கூறியுள்ளார். கூறியுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து நாகர்கோவில் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் மந்திரவாதி மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.