மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி வேன் சக்கரம் ஏறி இறங்கியதில் 3 வயது சிறுவன் தலைநசுங்கி மரணம் - கடலூரில் நெஞ்சை பதறவைக்கும் பயங்கரம்.!
சாலையோரம் விளையாடிய சிறுவன் திடீரென சாலைக்கு சென்றதால் பரிதாபமாக உயிர்போன துயரம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு ராமாபுரம் பகுதியை சார்ந்தவர் சீனிவாசன். இவர் நெடுஞ்சாலைத்துறை ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி தீபா.
தம்பதிகளுக்கு தேஜஸ்வரன் என்ற மூன்று வயது குழந்தை இருக்கிறான். இந்நிலையில், இன்று காலை சிறுவன் அங்குள்ள தாத்தா வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தான்.
அப்போது, திடீரென சாலைக்கு வந்த சிறுவனின் மீது அவ்வழியே வந்த பள்ளி வாகனத்தின் சக்கரம் ஏறி-இறங்கியதில் சிறுவன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த விஷயம் தொடர்பாக திருப்பாதிபுலியூர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.