ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
சிறுமியை கர்ப்பமக்கிய 42 வயது போலீஸ்காரர் போக்சோ சட்டத்தில் கைது..
திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த 16 வயது சிறுமி, பெற்றோரை இழந்ததால் அவரது பெரியம்மா வீட்டில் வசித்து வருகிறார். திருப்பூரில் வேலை செய்து வந்த சிறுமி, சில மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால் சிறுமியின் உறவினர்கள் அவரை விசாரித்தனர். அப்போது தான் கர்ப்பமாக இருப்பதாக அவர்களிடம் கூறியுள்ளார். உடனே உறவினர்கள் இந்த நிலைமைக்கு யார் காரணம் என விசாரித்தனர்.
அந்த சிறுமி எதுவும் சொல்லாததால் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமியை, அவர் வேலை செய்த திருப்பூருக்கு அழைத்து சென்று லால்குடி இன்ஸ்பெக்டர் மாலதி விசாரணை செய்தார். இந்நிலையில் திடீரென சிறுமி காணாமல் போனார். காணாமல் போன சிறுமியை கண்டுபிடித்து காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தினர்.
அப்போது, தனது கர்ப்பத்துக்கு காரணம் லால்குடி அருகில் உள்ள நன்னிமங்கலத்தை சேர்ந்த கல்லக்குடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் பிரகாஷ் (42) என்பவர் தான் என்று கூறியுள்ளார். அதனடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி பிரகாஷை, போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர். பிரகாசுக்கு கல்யானமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.