#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆணுறையில் சுற்றப்பட்டு இருந்த வாழைப்பழம்... ருசித்து சாப்பிட்ட வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்..!
மன நோயால் பாதிக்கப்பட்ட 34 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மேலும் அவரால் உணவுப் பொருட்களும், குடிநீர் போன்ற பானங்களும் உட்கொள்ள முடியவில்லை என்று மருத்துவரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவரது குடலானது 24 மணி நேரத்திற்கு மேலாக இயங்காமல் இருந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் அவருக்கு சிடி ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர் . அப்போது அவரது வயிற்றில் ஆணுறையில் சுற்றப்பட்ட வாழைப்பழம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றில் ஆணுறையில் சுற்றப்பட்டு இருந்த வாழைப்பழத்தை வெளியே எடுத்தனர். மேலும் அவர் மனநோயாளியாக இருப்பதால் கவனக்குறைவின் காரணமாக இதனை உட்கொண்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதனையடுத்து அவர் 3 நாட்கள் மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும் கவனக்குறைவின் காரணமாக வாலிபர் ஆணுறையுடன் கூடிய வாழைப்பழத்தை சாப்பிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.