மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிஸ்கட்டை தண்ணீர்ல நனைத்து சாப்பிடும் காகம்.. அதையும் கெடுத்துடீங்களாடா?... வைரலாகும் வீடியோ.!!
காகம் ஒன்று பிஸ்கெட்டை மனிதர்கள் தண்ணீரில் நனைத்து சாப்பிடுவது போல ருசித்து சாப்பிடும் வீடியோ வைரலாகியுள்ளது.
முகநூல் பக்கத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், காகம் ஒன்று பிஸ்கட் சாப்பிடுகிறது. வீட்டின் மொட்டை மாடியில் காகம் ஒன்று அமர்ந்துள்ள நிலையில், அந்த வீட்டை சார்ந்தவர் அதற்கு தட்டில் தண்ணீர் ஊற்றுகிறார்.
பின்னர், பிஸ்கட்டை காகத்திற்கு உணவாக கொடுத்த நிலையில், காகமோ பிஸ்கட்டை வாயில் கவ்விக்கொண்டு நீர் உள்ள சிறிய தட்டில் போடுகிறது. பிஸ்கட்டின் இரண்டு புறமும் நீரில் படுமாறு பிரட்டியெடுத்து, அதனை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுகிறது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பொதுவாக காகங்கள் மற்றும் குருவிகள் போன்ற பறவைகளுக்கு வீட்டில் உள்ள காய்கறி, பழங்கள், அரிசி, சாதம், பருப்பு, நிலக்கடலை போன்றவற்றை வழங்கி பார்த்திருப்போம். ஆனால், காகம் இங்கு பிஸ்கெட்டை சாப்பிடுவது பலரின் பார்வையை ஈர்த்துள்ளது.
பறவைகள், விலங்குகளுக்கு உணவளிக்க விரும்புவார்கள் இயன்றளவு இயற்கையான உணவுகளை வழங்குவதே நல்லது. நாம் தான் காலத்தின் மாற்றத்தால் சத்தில்லாத பொருட்களை சாப்பிட்டு வருகிறோம். அவைகளுக்கும் அதனை பழக்கப்படுத்த வேண்டாம் என்பதே பலரின் கோரிக்கை குரலாக உள்ளது.