திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
லாரி டயரில் சிக்கி சிதைந்த கை... துடித்து துடித்து பலியான கல்லூரி மாணவர்.!
திருப்பூரில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற மாணவரின் கைமீது லாரி ஏறிய விபத்தில் 20 வயது இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில் மங்கலம் சாலை சின்னாயி லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் தேவானந்த் வயது 20. இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். தினமும் உடற்பயிற்சிக்கு செல்லும் பழக்கம் கொண்ட தேவானந்த் இன்று காலையும் வழக்கம்போல் உடற்பயிற்சி கூடத்திற்கு கிளம்பி இருக்கிறார்.
தேவானந்த் தனது இரு சக்கர வாகனத்தில் குமரன் சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே சென்று கொண்டிருந்தபோது குமரன் சாலையிலிருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி சென்ற லாரி இவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி விழுந்த தேவானந்தின் வலது கை மீது லாரியின் பின் சக்கரங்கள் ஏறி கை சிதைந்து போனது. இதனால் பெருமளவு ரத்தப்போக்கு ஏற்பட்டது.
அந்த வழியே வந்த சிலர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தயாராக இருந்தபோது திடீரென தேவ் ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் தேவானந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் லாரி ஓட்டுநர் சதீஷை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.