திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடக்கொடுமையே... 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... போக்சோவில் கைது செய்யப்பட்ட டிரைவர்.!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு இருக்கும் விவகாரம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி. 33 வயதான இவர் குடிநீர் விநியோகிக்கும் வேனில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் அதே பகுதியைச் சார்ந்த கணவனை இழந்த பெண் ஒருவருடன் வாழ்ந்து வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் அந்தப் பெண்ணின் உறவுக்கார சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த திங்கள்கிழமை அந்த சிறுமி வீட்டில் அழுது கொண்டு இருந்தார். இது தொடர்பாக சிறுமியிடம் விசாரித்ததில் ஷாஜி அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அவர் மீது குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் குடும்பத்தார் புகார் அளித்தனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஷாஜி அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது காவல்துறை.