யானையின் சாணத்தில் நாப்கின், முகக்கவசம், பிளாஸ்டிக் கவர்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!



a Elephant Dung Have Napkin Facemask Plastic Cover Shocking Video Goes Viral

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மருதமலை செல்லும் சாலையில், யானையின் எச்சம் இருந்துள்ளது. இந்த எச்சத்தை வனவிலங்கு ஆர்வலர்கள் சோதனை செய்தனர். அப்போது, யானையின் உச்சத்தில் சுமார் அரைகிலோ அளவில் மனிதர்கள் உபயோகம் செய்து கீழே போட்ட பொருட்கள் இருந்துள்ளன. 

யானையின் உச்சத்தில் பால் கவர், முகக்கவசம், நாப்கின், சாம்பார்பொடி கவர், பெண்கள் ஜடைக்கு போடும் ரப்பர் பேண்ட், பிஸ்கட் கவர் உட்பட பல கவர்கள் போன்றவை இருந்துள்ளன. இவை அனைத்தும் வெளியே வந்ததால் யானையின் உயிர் தப்பியது. இவை யானையின் வயிற்றிலேயே இருக்கும் பட்சத்தில், கட்டாயம் அது யானைக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும். 

இந்த விஷயத்திற்கு காரணமாக வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கையில், "மருதமலை அடிவாரத்தில் உள்ள சோமையம்பாளையம் பகுதியில் குப்பை மேடு கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக தொடங்கப்பட்டது. குப்பை மேட்டினை தொடங்கும் போதே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வனத்துறையினர் நோட்டீஸ் கொடுத்ததும் பலனில்லை. 

5 யானைகள் கூட்டமாக வந்தால், அவை நேரடியாக குப்பைமேட்டை நோக்கி தான் பயணம் சேகரித்து. அதனை விரட்டவும் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இதனால் யானைகளுக்கு பெரும் அழிவு என்பது காத்துள்ளது. எத்தனை யானைகளின் வயிற்றில் பிளாஸ்டிக் உள்ளது என்பது தெரியவில்லை" என்று தெரிவிக்கின்றனர். 

மேலும், வனப்பகுதி வழியாக செல்லும் பெரும்பாலானோர் தாங்கள் சாப்பிடும் பொருட்களை அலட்சியமாக வீசி செல்லும் நிலையில், அதில் ஏதேனும் உணவு உள்ளதா அல்லது அதுவே உணவாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் சில விலங்குகள் பிளாஸ்டிக்கை உட்கொள்வது நடந்து வருகிறது. மக்கள் தங்களின் குப்பைகளை வீசி செல்லாமல் இருப்பது அனைவருக்கும் நலம்.