திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... நண்பர்களே போட்டுத் தள்ளிய கொடூரம்... கொலையாளிகளுக்கு வலைவீச்சு.!
தலைநகர் சென்னையில் பிரபல ரவுடி ஒருவரே அவரது நண்பர்களை ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை வில்லிவாக்கம் திருவேங்கடம் நகர் பகுதியில் சேர்ந்தவர் சதாம் உசேன்(32), இவர் மீது வில்லிவாக்கம் மற்றும் திருமங்கலம் காவல் நிலையங்களில் கொலை முயற்சி அடிதடி மற்றும் வழிப்பறி போன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று முன்தினம் இரவு இவர் தனது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து வில்லிவாக்கம் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து நான்கு நண்பர்களையும் சரமாரியாக தாக்கி இருக்கிறார் சதாம் உசேன்.
இந்நிலையில் நேற்று காலை தனது வீட்டு அருகே சதாம் உசேன் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்து அவரது நண்பர்கள் நான்கு பேரும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சதாம் உசேனை ஓட ஓட விரட்டி படுகொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த கொலை தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சதாம் உசேன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில் முன்தினம் இரவு தாக்கப்பட்டதற்கு பழிவாங்க ரவுடி சதாம் உசேனை ஓட ஓட விரட்டி படுகொலை செய்ததாக தெரிய வந்திருக்கிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான நான்கு பேரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.