மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விருதுநகர் அருகே பயங்கரம்.. வெடித்து சிதறிய பட்டாசு ஆலை.. விரைந்து சென்ற மீட்பு குழுவினர்.!
சமீபகாலமாகவே வெடிபொருட்கள் தயாரிக்கும் இடங்களில் விபத்து ஏற்பட்டு அனேக பேர் உயிரிழந்து வருகின்றனர். இவற்றை தவிர்ப்பதற்கு எத்தனை முயற்சிகளை மேற்கொண்டாலும் அவை அனைத்தும் தகுடுபிடி ஆகிவிடுகிறது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இயங்கி வரும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தானது அதிகாலையில் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த விபத்தின் போது பணியில் இருந்த சண்முகராஜ் என்ற தொழிலாளி இந்த வெடி விபத்தில் சிக்கி உடல் சிதறி பலியாகி உள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து நிகழ்விடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிக்காக விரைந்து சென்றுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.