#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பரபரப்பு... பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட கும்பல்... சதித்திட்டம் அம்பலம்.!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் கொள்ளையடிப்பதற்காக பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பல் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி எஸ்ஐ வேல்பாண்டி தலைமையில் எஸ்எஸ்ஐ பாபுராஜ் மற்றும் போலீசார் காயல்பட்டினம் பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் பேயன்விளை தர்மகுட்டி சாஸ்தா கோயில் அருகே சென்றபோது எஸ்ஆர்எஸ் கார்டன் காம்பவுண்டில் சிலர் பதுங்கி இருப்பதை கண்டனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரிக்க சென்ற போது அங்கிருந்து ஐந்து பேரும் தப்பி ஓட முயற்சித்தனர். ஆனால் காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அந்த கும்பலில் இருந்த ஒரு நபர் மட்டும் தப்பி ஓடி விட்டார்.
மேலும் அந்த கும்பல் இடமிருந்து அரிவாள், கத்தி, இரும்பு ராடு போன்ற பயங்கர ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பணக்காரர்கள் வசிக்கும் எஸ் ஆர் எஸ் கார்டன் பகுதியில் பூட்டி இருக்கும் வீட்டை நோட்டமிட்டு அவற்றை கொள்ளையடிக்க வந்தது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தூத்துக்குடி 3வது மைல் திரு.வி.க.நகரைச் சேர்ந்த வேல்சாமி மகன் காளியப்பன்(27), ஆறுமுகநேரி கமலாநேரு காலனி கோபால் மகன் சஞ்சய்குமார்(21), ஆறுமுகநேரி கீழசண்முகபுரம் கந்தசாமி மகன் பெருமாள்(23), ஸ்பிக்நகர் 3வது தெரு பாரதிநகர், பாலசுப்பிரமணியன் மகன் சங்கர்கணேஷ்(25) என்பதும், தப்பியோடியவர், புதுக்கோட்டை பிரகாஷ்நகர் தங்கமாரி மகன் சுடலைமுத்து(23) என்பதும் தெரியவந்தது. இந்த வழக்கில் தப்பி ஓடிய சுடலை முத்துவை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.