திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பெரும் சோகம்..மின்னல் தாக்கி மீனவர் பலி..!
மயிலாடுதுறை மாவட்டம் பெருமாள்பேட்டை மீனவ கிராமத்தில் அருண் - ஜான்சி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இதனையடுத்து அருண் தன்னுடைய தம்பி கண்ணபிரானின் பைபர் படகில் மணிவேல், கவிராஜ், சுப்பிரமணியன் ஆகியோருடன் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார். இதனைதொடர்ந்து மீன் பிடித்துவிட்டு அதிகாலை அவர்கள் துறைமுகத்திற்கு திரும்பியுள்ளனர். அப்போது அந்த பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் படகு கரைக்கு வந்ததும் கண்ணபிரான், மணிவேல், கவிராஜ் மற்றும் சுப்பிரமணியன் ஆகிய நால்வரும் படகிலிருந்து கரையில் இறங்கி உள்ளனர். அதன் பின் அருண் படகிலிருந்து இறங்க முயற்சித்த போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்னல் தாக்கியதில் அருண் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து கடலோர காவல் குழும போலீசார் மற்றும் பொறையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.