திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மாமியாரோடு தொடர்ந்த கள்ளக்காதலை கைவிட மறுத்த நண்பனுக்கு சுத்தி அடி.!
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள மொரட்டாண்டி சனிஸ்வர பகவான் கோவில் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் கோபி. அதே பகுதியில் முத்துமாரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கௌதம். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கவுதமிற்கு தனது மாமியார் சசிகலா மற்றும் கோபி தகாத உறவில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கோபியிடம் தனது மாமியாரிடம் பேசி பழகுவதை கைவிடுமாறு கவுதம் அறிவுறுத்தியுள்ளார். இதனை கோபி சற்றும் பொருட்படுத்தாமல் காதல் மோகத்தில் சசிகலாவுடன் தொடர்ந்து உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கவுதம், கோபி வீட்டிற்கு இரவு யாருமில்லாத நேரத்தில் சென்று மறைத்து வைத்திருந்த சுத்தியல்லால் கோபியின் தலையில் பல முறை தாக்கியுள்ளார். இதனையடுத்து கோபியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இரத்த வெள்ளத்தில் இருந்த அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கவுதம் காவல் நிலையத்தில் தன் நண்பனை சுத்தியலால் தாக்கி கொலை செய்தது ஒப்புக்கொண்டு சரணடைந்தார். இதையடுத்து கவுதம் மீது போலிஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.