நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
குன்னூர் பகுதியில் பங்களாவுக்குள் புகுந்த சிறுத்தை.! 6 பேர் படுகாயம்.!
நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில், ஒரு பங்களாவுக்குள் புகுந்த சிறுத்தை 18 மணி நேரத்திற்கு பின்னர் தானாகவே வெளியேறியது. நேற்றைய தினம் குன்னூர் புரூக் லேண்ட் என்ற பகுதியில் ஒரு வளர்ப்பு நாயை துரத்தி வந்த சிறுத்தை, விமலா என்பவரின் வீட்டிற்குள் நுழைந்தது. இது குறித்து தகவலறிந்து, அந்த பகுதிக்கு சென்ற வருவாய் ஊழியர் மற்றும் தீயணைப்பு படையினர் உள்ளிட்டோரை அந்த சிறுத்தை தாக்கியது. இதில் 6 பேர் காயமடைந்தனர்.
நேற்றைய தினம் தீபாவளி என்பதால், வெடி மற்றும் பட்டாசு சத்தங்களின் காரணமாக, ஏற்பட்ட பயத்தால், சிறுத்தை அந்த வீட்டை விட்டு வெளியேறாமலிருந்தது. இது குறித்து மாவட்ட வன அலுவலர் அறிவுறுத்தலின்படி முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் மேற்பார்வையில், அந்த சிறுத்தையை, அந்த வீட்டிலிருந்து வெளியேற்றும் பணி நடைபெற்று வந்தது. நேற்று மாலை வரையில், அந்த வீட்டிலிருந்து சிறுத்தை வெளியேறாததால், அந்த வீட்டிலிருந்த 3 கதவுகளையும் திறந்து விட்டு, பின்பு தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், இன்று காலை அங்கே பொருத்தப்பட்டிருந்த அனைத்து கேமராக்களையும் ஆய்வு செய்ததில், நேற்று இரவு 10 மணியளவில் அந்த சிறுத்தை அந்த வீட்டை விட்டு வெளியேறியது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 18 மணி நேர தீவிர முயற்சிக்குப் பிறகு சிறுத்தை அந்த வீட்டை விட்டு வெளியேறியதால், அந்த பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.