மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிகார கணவனின் வெறிச்செயல்..!! மூளையில் கட்டிய ரத்தத்தால் பரிதாபமாக பறிபோன உயிர்..!!
புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (37) டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கோமதி (35). இருவருக்கும் திருமணம் நடந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
பிரேம்குமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் குடித்துவிட்டு வந்து அடிக்கடி மனைவியிடம் சண்டை போடுவது வழக்கம். இந்நிலையில் பிரேம்குமார் கடந்த 21 ஆம் தேதி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து வழக்கம்போல் மனைவி கோமதியிடம் சண்டை போட்டுள்ளார்.
இது தொடர்பாக கோமதி புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிரேம்குமாரை அழைத்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது இருவரும் சமரசமாக போவதாக கூறினர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் பிரேம்குமாரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
பின்னர் வீட்டிற்கு வந்த பிரேம்குமார் கோமதியிடம் சண்டை போட்டு கன்னத்தில் அடித்து கிழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் கோமதி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து மயங்கியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரேம்குமார் வீட்டில் இருந்து தப்பி ஓடினார்.
மகளை பார்க்க வீட்டிற்கு வந்த கோமதியின் தாய், மகள் மயங்கி கீழே கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் கோமதியை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு மூளையில் ரத்தம் கட்டியுள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து நேற்று கோமதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இருந்தும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பிரேம்குமாரை கைது செய்தனர்.