திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
2 மாதத்தில் கசந்த காதல்!.. ஓரே கயிற்றில் பிணமாக தொங்கிய காதல் ஜோடி: சோகத்தில் மூழ்கிய கிராமம்..!
தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் அருகேயுள்ள அனந்தமாடன்பச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் தங்கமுனியசாமி ( 28). இவர் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் துவரங்கை பகுதியை சேர்ந்த சீதாலட்சுமி (22) என்பவரை காதலித்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு அனந்தமாடன்பச்சேரியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காதல் தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று காலை நீண்ட நேரம் கழிந்த பின்பும் தங்கமுனியசாமியின் வீடு திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை திறக்க முயன்றனர். கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால் தருவைகுளம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்தூறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அ
வீட்டினுள் ஓரே கயிற்றின் ஒரு முனையில் தங்க முனியசாமியும், மற்றொரு முனையில் சீதாலட்சுமியும் தூக்கில் பிணமாக தொங்கினர். அவர்களது சடங்களை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் ஆஎ.டி.ஓ விசாரணை மேற்கொண்டு வருகிறார். திருமணமாகி 2 மாதங்களில் காதல் ஜோடியினர் தூக்கில் தொங்கிய சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.