மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி!,, பெற்றோர் கெஞ்சியும் அசராமல் நின்ற இளம் பெண்..!
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உடையார்பாளையம் பக்தியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் இளந்தமிழன் (25). இவரும் ஜெயங்கொண்டம் பகுதியில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் படித்து வரும் மகேஸ்வரி என்பவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களது காதலுக்கு இரு தரப்பு பெற்றோர்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதலர்கள் இருவரும் உடையார்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதன் பின்னர் தங்களது பெற்றோர்களுக்கு பயந்து பாதுகாப்பு கேட்டு ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதனையடுத்து காவல் நிலைய ஆய்வாளர் சுமதி, புதுமணத் தம்பதிகளிடம் விசாரணை மேற்கொண்டதுடன் திருமணம் குறித்து இரு தரப்பு பெற்றோர்களிடம் தகவல் அளித்தார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மகேஸ்வரியின் பெற்றோர் காவல் நிலையத்திற்கு வந்து அவரை தங்களுடன் வருமாறு கெஞ்சியுள்ளனர்.
மகேஸ்வரி பெற்றோருடன் செல்ல மறுத்ததுடன், இளந்தமிழனோடுதான் செல்வேன் என்று கூறியுள்ளார். இதனால் அவரது பெற்றோர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனையடுத்து இளந்தமிழனின் பெற்றோர்களை அழைத்த காவல்துறையினர், அவர்களுக்கு அறிவுரைகள் கூறி அவர்களோடு காதலர்களை அனுப்பி வைத்தனர்.