தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஆரணி ல இருந்து.... 1000 ரூபாய் கடனுக்காக ஆண்டுக்கணக்கில் அமைதி பேச்சுவார்த்தை.. நொந்துபோன இளைஞர் என்ன தெரியுமா?..!
சமூக வலைதளப்பக்கத்தின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கிய நாளில் இருந்து சைபர் குற்றங்களும் பல்வேறு வழிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குறைந்தபட்சமாக நபருக்கு ரூ.1 முதல் பல இலட்சம் கோடி வரை ஏமார்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருவண்ணாமலையில் உள்ள செஞ்சியை சேர்ந்தவர், ஆரணியை சேர்ந்த முன்பின் தெரியாத முகநூல் நண்பருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக அவசர தேவைக்காக ரூ.1000 கடன் கொடுத்ததாக தெரியவருகிறது. கடனை வாங்கியவரும் ஆரணி சென்றதும் தருகிறேன் என்று கூறியுள்ளார்.
ஆனால், பல ஆண்டுகள் கடந்தும் பணம் வந்தபாடில்லை. பணத்தை மாதாமாதம் கேட்டு விரக்தியான செஞ்சி நபரை மேலும் கலாய்க்கும் வகையிலேயே அந்த முகநூல் பிச்சைக்காரர் பதில் அளித்துள்ளதாக செஞ்சி நபரின் நண்பர்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
கடனை கேட்டு விரக்தியடைந்த செஞ்சி நபர் தனது முகநூல் பக்கத்தில் அனைத்தையும் புகைப்படமாக பதிவு செய்து, ஆன்லைன் மூலமாக அவசர உதவி என யார் பணம் கேட்டாலும் ரூ. 100, ரூ.200 க்கு மேல் கொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
அவசரத்திற்கு என்று பணம் வாங்கி இவர்கள் செய்யும் தில்லாலங்கடி வேலையால் ஒருநாள் உண்மையில் பணம் தேவைப்படுபவன் உதவிக்கு ஆட்கள் இன்றி திணரப்போகிறான் என்பதே நிதர்சனம்..