மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பட்டப்பகலில் ஒருவர் குத்திக் கொலை.! அருகில் இருந்த மக்கள் பீதி.!
மதுரை மாவட்டத்தில் உள்ள தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய் கணேஷ். 35 வயதாகும் இவர் கூலித்தொழிலாளியாக இருந்து வந்தார். இவர் கோவை துடியலூரை அடுத்த காசிநஞ்சை கவுண்டன் புதூரில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
இன்று காலை 6 மணி அளவில், ஜெய் கணேஷ் தேனீர் அருந்துவதற்காக அருகில் உள்ள டீக்கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது ஒரு மர்ம நபர், இரு சக்கர வாகனத்தில் வந்து, ஜெய்கணேஷை கத்தியால் குத்தியுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் அலறி ஓடினர்.
இதனால் பலத்த காயமடைந்த ஜெய்கணேஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அருகில் உள்ள கடையின் முன்பு விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இறந்த ஜெயகணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கொலைக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய குற்றவாளியை பிடிப்பதற்கான முயற்சிகளில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆள் நடமாட்டம் உள்ள காலை வேளையில் ஒருவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.