மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டாஸ்மாக் அருகே வாலிபரை சரமாரியாக வெட்டி கொலை செய்த மர்ம கும்பல்.. கொடூர சம்பவம்..!!
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில், வாலிபரை சரமாரியாக வெட்டி கொலை செய்த மர்ம கும்ப கும்பல்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த, முருகன் என்பவரின் மகன் சுந்தரமூர்த்தி (39) என்பவர், அதே பகுதியில் ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார்.
சுந்தரமூர்த்திக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் சுந்தரமூர்த்தி வழக்கம் போல் நேற்று இரவு, அவரது ஸ்டுடியோவை மூடிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
குறிஞ்சிப்பாடி டாஸ்மார்க் அருகே வந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென்று, சுந்தரமூர்த்தியை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
மூர்த்தி சம்பவ இடத்திலேயே சுந்தரமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த சுந்தரமூர்த்தியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சுந்தரமூர்த்தியை வெட்டி கொலை செய்த மர்மம் கும்பல் குறித்து, தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.