96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஜூஸில் மயக்க மருந்து கலந்து நர்சிங் மாணவி பாலியல் வன்கொடுமை... தந்தை மற்றும் மகன் கைது.!
அக்கா மகளின் பிறந்தநாள் விழாவிற்கு வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நர்சிங் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தந்தை மற்றும் மகன் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் குலசேகரம் நல்லூர் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் நாகர்கோவிலில் உள்ள நர்சிங் ஹோம் ஒன்றில் தங்கியிருந்த நர்சிங் படித்து வருகிறார். இந்த மாணவியின் உறவினரான பால்ராஜ் என்பவர் திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரிகள் வசித்து வருகிறார். இவரது மகளுக்கு திருமணமாகி நான் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பால்ராஜ் மகன் சிவகுமார்(25) மண்டைக்காட்டில் உள்ள அக்கா வீட்டில் தங்கி இருந்து படகு கட்டும் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் சிவக்குமாரும் நர்சிங் மாணவியும் நட்பாக பழகி வந்தனர். உறவினர்கள் என்பதால் செல்போனிலும் அடிக்கடி பேசி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அக்காவின் மகளுக்கு கடந்த இரண்டாம் தேதி பிறந்தநாள் விழா இருப்பதால் நீயும் வா என அழைத்திருக்கிறார் சிவக்குமார். இதனை நம்பி அந்த மாணவி அங்கு சென்ற போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நரசிங் மாணவியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மயக்கம் தெளிந்ததும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்த மாணவி கதறி அழுது இருக்கிறார்.
அவரை சமாதானப்படுத்துவதற்காக திருமணம் செய்து கொள்வதாக கூறி இருக்கிறார் சிவகுமார். இந்த சம்பவத்தை அறிந்த சிவகுமாரின் பெற்றோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் மாணவியை தர குறைவாகவும் பேசி உள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவி குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். புகாரை விசாரித்த காவல்துறையினர் சிவகுமார் மற்றும் அவரது பால்ராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.