மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடைக்கு சென்ற சிறுமியை தாக்கிய விஷ பாம்பு.. சிகிச்சை பலனின்றி பலியான சோகம்.!
பிகாா் மாநிலத்தை சேர்ந்த ரினாதேவி தனது 3 குழந்தைகளுடன் ஈரோடு குட்டப்பாலயத்தில் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ரினாதேவி ஈரோடு சிப்காடில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மகள் ராதிகாகுமாரி எழுதிங்கள்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவத்தன்று மாலை ராதிகாகுமாரி தனது வீட்டின் அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது ராதிகாகுமாறி காலில் எதிர்பாராத விதமாக அந்த வழியே சென்ற பாம்பு கடித்தது. இதனால் அந்த சிறுமி அலறி சத்தம் போட்டுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து உடனே சிறுமியை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அங்கு சிறுமி ராதிகாகுமாரிக்கு முதலுதவி செய்யபட்டு பின் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ராதிகாகுமாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து சென்னிமலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.