மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொலை வெறியுடன் துரத்திய காட்டு யானை: ஜஸ்ட்ல எஸ்கேப் ஆன ரிட்டயர்டு டீச்சர்!.. அதிர வைக்கும் சி.சி.டி.வி காட்சி..!
கோவை மாவட்டம் துடியலூர் அருகேயுள்ள பொன்னூத்து கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவர் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தற்போது தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்த பொன்னூத்து கிராமம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. கேரள மாநில எல்லையோரம் உள்ள இந்த கிராமத்திற்கு உணவு தேவைக்காக வனவிலங்குகள் வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானைகள் சில பொன்னூத்து கிராமத்திற்குள் புகுந்துள்ளன. இது குறித்து தகவலறிந்த ஆசிரியர் ராமசாமி, சோளம் பயிரிடப்பட்டுள்ள தனது விவசாய நிலத்தில் வனவிலங்குகளிடம் பாதுகாக்க அமைக்கப்பட்ட மின் வேலி செயல்படுகிறதா என்று பரிசோதனை செய்துள்ளார்.
அந்த நேரத்தில், கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை ஆண் யானை ஒன்று திடீரென ராமசாமியை விரட்டியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் யானையின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓட்டம்பிடித்தார். இதனைதொடர்ந்து பட்டாசுகளை வெடித்த அக்கம்பக்கத்தோர் காட்டுயானையை விரட்டியடித்தனர். காட்டு யானையிடம் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமசாமி உயிர் தப்பிய சம்பவம் குறித்த சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.