மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"எனக்கு படிக்க தகுதியில்ல., என்னை கஷ்டப்பட்டு படிக்க வச்சீங்க" - தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மாணவர் தற்கொலை.!
11ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர், இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நேற்று 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் அடுத்தடுத்து வெளியாகின. தேர்வு முடிவுகள் முந்தைய ஆண்டுகளை விட சிறப்பாகவே பலருக்கும் அமைந்தன.
இந்த நிலையில், 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர், இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் இரயில் நிலையத்தில் மாணவர் ஜீவா, இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவர் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.
அந்த கடிதத்தில், "நான் ஜீவா. எனது பாட்டி, அம்மா கஷ்டப்பட்டு என்னை படிக்க வைத்தார்கள். 10ம் வகுப்பு நான் படித்தபோது குறைவான மதிப்பெண் பெற்றேன்.
11ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறலாம் என எண்ணிய நிலையில், என்னால் அது முடியவில்லை. இதனால் நான் கல்வியில் தகுதியற்றவன் ஆகிறேன். எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை.
அம்மா பாட்டியை நல்ல பார்த்துக்கோ, தம்பியை நல்லா பார்த்துக்கோ, நீ உன் உடம்பை நல்லா பார்த்துக்கோ, நான் போயிட்டு வரேன்" என எழுதியுள்ளார்.