மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படிக்கட்டு பயணத்தால் பயங்கரம்; இரயில் சக்கரத்தில் சிக்கி கால்கள் துண்டாகிய சோகம்.! கடலூரில் பரிதாபம்.!
கடலூர் மாவட்டம், சிதம்பரம் இரயில் நிலையத்தில் மயிலாடுதுறை - விழுப்புரம் விரைவு ரயில் வந்துகொண்டிருந்தது. இந்த இரயிலின் படிக்கட்டில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., மாணவர் பயணம் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சிதம்பரம் இரயில் நிலையத்திற்கு முன்பு வரும்போது, கல்லூரி மாணவர் தவறி கீழே விழுந்துள்ளார். ஓடும் இரயிலில் இருந்து அவர் தவறி தண்டவாளத்திற்குள் விழுந்துள்ளார்.
இதனால் அவரின் கால்கள் துண்டாகிய நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் காவல் துறையினர், மாணவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.