மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதலியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபர்: மன உளைச்சலால் பெண் செய்த காரியம்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள இறைஞ்சி பகுதியை சேர்ந்தவர் முனியன். இவரது மகன் சிரஞ்சீவி (35). இவருக்கும், கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள ஐவதுகுடியை சேர்ந்த கணவரை இழந்து தனியாக வசித்து வரும் 30 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிரஞ்சீவி, அந்த பெண்ணிடம் நகை மற்றும் பணத்தை வாங்கிக் கொண்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகும் அவர், அந்த பெண்ணிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அந்த பெண் பணம் கொடுக்க மறுத்துள்ளார்.
இதன் பின்னர், பணம் கொடுக்கவில்லை என்றால், தன்னுடன் தனிமையில் உல்லாசமாக இருந்த போது எடுத்த ஆபாச புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த பெண், பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி, தனது கள்ளக்காதலியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.
இதன் பின்னர் முகநூலில் வந்த ஆபாச புகைப்படத்தை காண்பித்து, சிரஞ்சீவியின் தந்தை முனியன், அவரது தாய் அங்கம்மாள், மனைவி ரஞ்சிதகுமாரி மற்றும் இறைஞ்சி கிராமத்தை சேர்ந்த காசியம்மாள், மணிகண்டன் ஆகியோர் அந்த பெண்ணிடம் பணம் மற்றும் நகை கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து அந்த பெண், வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சிரஞ்சீவி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்தூறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.