மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகம் வந்த சுற்றுலா பயணி தங்கும் விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை... போலீசார் விசாரணை...!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார்பேட்டையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் ஒருவர் அறை எடுத்து தங்கியுள்ளார். அவர் அறையில் இருந்து நீண்ட நேரம் வெளியில் வராததால் சந்தேகமடைந்த லாட்ஜில் வேலை செய்பவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அந்த நபர் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். இதை தொடர்ந்து காவல்துறையினர் அந்த நபரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் ஆந்திர மாநிலம் பிரகதி நகரில் வசிக்கும் ஜிதேந்திர நாயுடு என்பது தெரியவந்தது. மருத்துவரான அவர் தனது உறவினர்களுடன் தமிழகத்திற்கு சுற்றுலா வந்துள்ளார் என்று தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் ஜிதேந்திர நாயுடு தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா பயணி ஒருவர் லாட்ஜில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.