மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரயில்வே தண்டவாளங்களுக்கு இடையே டூ-வீலரில் சாகசம்: பரிதாபமாக பலியான வங்கி ஊழியர்..!
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி, அண்ணாநகர் பகுதியிலுள்ள 3-வது தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவருடைய மகன் பிரணவ நந்தேஷ் (32). இவர் படர்ந்தபுளி பகுதியில் உள்ள பேங்க் ஒன்றில் கிளார்க்காக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று இவருடைய டூ-வீலர் மீளவிட்டான் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கிடந்தது. சிறிது தூரத்தில் ரெயில்வே தண்டவாளம் அமைப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த காங்கிரீட் ரீப்பர்கள் அருகில் அரை நிர்வாணமாக உயிரிழந்த நிலையில் பிரணவ நந்தேஷ் சடலமாக கிடந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தூத்துக்குடி ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நேற்று பிற்பகலில் மீளவிட்டான் ரயில் நிலையத்திற்கு வந்த பிரணவ நந்தேஷ், அங்கிருந்து டூவீலரி ரயில்வே தண்டவாளத்துக்குள் வந்துள்ளார். இதன் பின்னர் தண்டவாளங்களுக்கு இடையே டூ-வீலரை வேகமாக ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. எதிர்பாராமல் நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் அவரது உடைகளும் கிழிந்துள்ளது. இதன் பின்னர் அவர் தனது கிழிந்த மேலாடைகளை கழற்றிவிட்டு ரீப்பர் அருகே அமர்ந்த நிலையில் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது சடலத்தை மீட்ட ரயில்வே காவல்தூறையினர், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.