குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
கூடுவாஞ்சேரி இரயில் நிலையத்தில் காணாமல் போன இரு சக்கர வாகனம் கிளாம்பாக்கத்தில் பறிமுதல்.. இருவர் கைது.!
கூடுவாஞ்சேரி கன்னிவாக்கம் ஆபிரகாம் தெருவை சேர்ந்தவர் அமீன். இவர் தனது இரு சக்கர வாகனத்தை கூடுவாஞ்சேரி இரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து அமீன் வேலை முடித்து திரும்பி வந்து பார்த்தபோது அவரது இரு சக்கர வாகனம் அங்கு காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அருகில் வாகன தணிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தபோது இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் அதி வேகமாக வந்ததுடன் போலீசாரை பார்த்ததும் தப்பி செல்ல முயற்சி செய்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அந்த இரு சக்கர வாகனத்தை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் சென்னை சூளைமேட்டை சேர்ந்த மணிகண்டன், மற்றும் கோடம்பாக்கத்தை சேர்ந்த அருண் என்பது தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் அவர்களிடமிருந்த இரு சக்கர வாகனம் கூடுவாஞ்சேரி இரயில் நிலையத்தில் காணாமல் போன அமீனின் வாகனம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து மணிகண்டன் மற்றும் அருணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.