ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
3 கணவர்களை திருமணம் செய்த பெண்.!. 4 வதாக ஏற்பட்ட கள்ளக்காதல்; உல்லாசத்தின் போது குழந்தையை அடித்துக் கொன்ற கொடூர செயல்..!!
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகில் உள்ள புதூர்காடம்பட்டியில் செங்கல் சூளையில் சக்திவேல் என்பவர் வேலை செய்து வந்தார். சக்தி வேல் சத்தியமங்கலம், புதுவடவள்ளியை சேர்ந்தவர் இவரது மனைவி கலைவாணி (27) இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
அதே செங்கல் சூளையில் மல்லேஷ் என்பவர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கலைவாணியுடன் மல்லேஷூக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது கள்ளகாதலாக மாறி இரண்டு பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மல்லேசுவை பிரிந்து கலைவாணியால் இருக்க முடியவில்லை.
இந்த நிலையில் மல்லேஷூக்கு கலைவாணியின் குழந்தையின் மீது வெறுப்பு வந்ததுள்ளது. வேறு ஒருவருக்கு பிறந்த குழந்தையை, தன்னால் வளர்க்க முடியாது என்று மல்லேஷ் கூறியுள்ளார். சம்பவத்தன்று இரண்டு பேருமே சேர்ந்து இரவு மது அருந்தி உள்ளனர்.
அதன் பின்னர் பிறகு உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது குழந்தை அழுததால் ஆத்திரம் அடைந்த இருவரும், குழந்தையை சுவற்றில் தூக்கி அடித்துள்ளனர். இதனால், குழந்தை படுகாயமடைந்த குழந்தையை மறுநாள் ஓமலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். குழந்தை கவலைக்கிடமானதால் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், குழந்தை நேற்று இறந்துவிட்டது.இது குறித்து தாரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் இந்த கள்ள காதல் ஜோடி தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் இருவரும் கர்நாடகாவில் தலைமறைவாக இருப்பதாக காவல்துறையினருக்கு தெரியவந்தது.
காவல்துறையினர் அங்கு சென்று இரண்டு பேரையும் கைது செய்தனர். , கலைவாணிக்கு ஏற்கனவே மூன்று கணவர்கள் உள்ளதாகவும், நான்காவது கணவர் மல்லேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.