திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஒரே நேரத்தில் 4 கணவர்களுடன் குடும்பம் நடத்திய பெண்: 5 வது திருமணத்தின் போது முளைத்த சிக்கல்..!
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள கஸ்பா பகுதியை சேர்த்தவர் ஐஸ்வர்யா. இவர் ஏற்கனவே 4 பேரை திருமணம் செய்து ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவருடன் மாற்றி மாற்றி வாழ்க்கை நடந்தி வந்த நிலையில் 5 வதாக ஒருவரை திருமண செய்ய முயன்ற போது சிக்கிய சம்பவத்தால் பரபரபு ஏற்பட்டது.
முன்னதாக கரும்பூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி, கஸ்பா பாபு, புத்துக்கோவில் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம், பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த அசோகர் ஆகியோரை வெவ்வேறு காலகட்டங்களில் தனித்தனியாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். மேலும் அவர்கள் ஒவ்வொருவரிடமும் தலா பத்து சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஐந்தாவதாக மாதுனூர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரை ஐஸ்வர்யா திருமணம் செய்ய முயன்ற போது நான்கு பேருக்கும் தகவல் தெரிந்துள்ளது. இதனையடுத்து உம்ராபாத் காவல் நிலையத்தில் 2 பேரும், பேரணாம்பட்டு மற்றும் ஆம்பூர் காவல் நிலையங்களில் தலா ஒருவரும் ஐஸ்வர்யாவின் மோசடி திருமணம் குறித்து புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்தூறையினர் ஐஸ்வர்யாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் ஆம்பூர் காவல் நிலையத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், நான்கு பேரும் அவர்கள் ஐஸ்வர்யாவுக்கு கொடுத்த நகை மற்றும் பணத்தை திருப்பிக் கொடுத்தால் போதும் புகாரை திரும்ப பெறுகிறோம் என்று கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா மூன்று மாதங்களில் நகை பணத்தை கொடுத்துவிட்டு ஐந்தாவது நபரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். அதற்கு நான்கு கணவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனை ஐஸ்வர்யாவிடம் இது குறித்து உறுதிமொழி பத்திரம் எழுதி பெற்றுக் கொண்டு அவரை அனுப்பியதாக கூறப்படுகிறது.