96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல... யூடியூப் பார்த்து ஸ்கெட்ச் போட்ட மனைவி... காவல்துறையிடம் சிக்கியது எப்படி.?
நாமக்கல் அருகே கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்ட முயன்ற பெண்ணை ஊர் மக்கள் சேர்ந்து மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்த பெண் பகிர்வாக்கும் மூலம் அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த சின்னகாக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்(30). இவரது மனைவி இளவரசி (27). இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நல்லம்பாளையம் பகுதியில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது தோட்டத்தின் உரிமையாளர் சக்திவேலுக்கும் இளவரசிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.
இந்த விஷயம் கணவர் குணசேகரனுக்கு தெரிய வரவே அவர் மனைவியை கண்டித்ததோடு மனைவியை அழைத்துக் கொண்டு சொந்த ஊர் திரும்பினார். அதன் பிறகும் இளவரசி தனது கள்ளக்காதலன் சக்திவேலுடன் செல்போனில் பேசி வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சக்திவேல் தனது 2 நண்பர்களுடன் இளவரசியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இளவரசி சக்திவேல் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் சேர்ந்து குணசேகரனை கொலை செய்ய திட்டமிட்டு தலையணையை வைத்து அழுத்தி உள்ளனர்.
இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்ட குணசேகரன் அலறி துடித்திருக்கிறார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து தப்பிச் செல்ல முயன்ற இளவரசியை ஊர் மக்கள் மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவல்துறையின் விசாரணையில் தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை தீர்த்துக்கட்ட இது போன்ற சமூக ஊடகங்களில் கொலை செய்து அதை எவ்வாறு மறைப்பது என வீடியோக்களை பார்த்து தெரிந்து கொண்டதாக இளவரசி பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இந்த கொலை முயற்சியில் தப்பி ஓடிய சக்திவேல் மற்றும் அவரது இரண்டு நண்பர்களையும் காவல்துறை தேடி வருகிறது.