திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விவசாய கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்..சோகத்தில் பெற்றோர்..!
விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மகள் புவனேஸ்வரி சென்னை அம்பத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் புவனேஸ்வரி விடுமுறைக்காக தனது சொந்த ஊரான ஆசூருக்கு வந்து தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து திடீரென்று புவனேஸ்வரி வீட்டிலிருந்து காணாமல் போய் உள்ளார். இதனால் பதறிப்போன புவனேஸ்வரியின் பெற்றோர் பல இடங்களில் அவரை தேடியுள்ளனர். இந்நிலையில் அய்யனார் வீட்டின் அருகில் உள்ள காசிநாதன் என்பவரது விவசாய கிணற்றில் புவனேஸ்வரி சடலமாக கிடந்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்து உடனடியாக அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்த புவனேஸ்வரியின் சடலத்தை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்னவென்று பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இளம்பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.