திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உயிரைக் குடித்த இன்ஸ்டா காதல்... தற்கொலைக்கு முயன்ற காதலன்... நெஞ்சை உறைய வைக்கும் கொடூர கொலை.!
திருப்பூர் மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான காதலி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பெண்ணை கொலை செய்த காதலன் தற்கொலைக்கு முயன்று தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் சத்தியஸ்ரீ திருப்பூர் குமரன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சத்தியஸ்ரீக்கும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியைச் சேர்ந்த நரேந்திரனுக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது.
இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த காதலர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து விரக்தி அடைந்த சத்தியஸ்ரீ, நரேந்திரனுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார். தன் காதலி தன்னுடன் பேசாமல் இருப்பது நரேந்திரனுக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவர் சத்தியஸ்ரீ வேலை செய்யும் தனியார் மருத்துவமனைக்கு சென்று அவருடன் பேச முயன்றிருக்கிறார். அதற்கு சத்யஸ்ரீ மறுப்பு தெரிவிக்கவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார் .
இந்தக் கொடூர சம்பவத்தை நேரில் கண்ட அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர். அப்போது நரேந்திரன் கத்தியால் தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டு மயங்கி விழுந்தார். இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சத்தியஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கு முயன்ற நரேந்திரன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.