திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கணவரை பிரிந்து காதலனுடன் சேர்ந்தும் நிம்மதி இல்லையே..!! இளம் பெண் தற்கொலையால் பரபரப்பு..!!
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மனைவி பவித்ரா (24) இவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், இந்த தம்பதியினருக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார்.
பவித்ரா திருமணத்திற்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியை சேர்ந்த தமிழ்வாணன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பவித்ராவின் தந்தை கோவிந்தராஜிக்கு தெரியவர, பவித்ராவை புருஷோத்தமனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
திருமணத்திற்கு பின்பும் பவித்ரா தன் காதலன் தமிழ்வாணனுடன் தொடர்பில் இருந்துள்ளார். இது பவித்ராவின் கணவருக்கு தெரியவந்ததால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் எற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், தன் குழந்தையுடன் கணவரின் வீட்டில் இருந்து பவித்ரா வெளியேறியுள்ளார்.
இதன் பின்னர் தனது முன்னாள் காதலன் தமிழ்வாணனுடன் பொத்தேரி அருகேயுள்ள தைலாவரம் பகுதியிலுள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பவித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி காவல்துறையினர், பவித்ராவின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.