மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவி மற்றும் குழந்தைகளின் கண் முன்னே ஆற்றில் முழ்கி பலியான இளைஞர்!,..சுற்றுலாவுக்கு வந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்..!
கேரளாவிலிருந்து வால்பாறைக்கு சுற்றுலா வந்த இளைஞர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம் கண்ணூர் தலச்சேரியில் வசித்து வருபவர் முகமது மன்சூர்(38). இவர் குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறை ஊருக்கு வந்திருந்த நிலையில் முகமது தனது மனைவி பரிதா குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளார்.
நேற்று மதியம் நல்ல காத்து எஸ்டேட் அருகே சோலையாற்றில் இறங்கி முகமது மன்சூர் மற்றும் அவரது குடும்பத்தினர் குளித்துள்ளனர். மன்சூருக்கு நீச்சல் தெரியாத நிலையில் அவர் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் முழ்கினார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் வால்பாறை காவல் காவல் துறையினருக்கும் மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் இறங்கி தேடுதல் பணியைமேற்கொண்டனர். நீண்ட நேரத்திற்கு பின்னர் அவர்கள் மன்சூரை சடலமாக மீட்டனர்.
பின்னர் காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனைவி குழந்தைகள் கண் முன்னே கேரள இளைஞர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.