திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கணவன் கண்முன்னே பறிபோன மனைவி உயிர்.. கதறும் குடும்பத்தினர்!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் ஹரிதாஸ். இவருக்கும் சந்தியா என்ற பெண்ணுக்கும் கடந்து சில மாதங்களுக்கு முன்பு திருமணமாகியது. இந்த தம்பதியினர் சென்னை மாதவரத்தில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
எந்த நிலையில் நேற்று முன்தினம் தைப்பூசம் விடுமுறையை முடித்துவிட்டு இவர்கள் இருவரும், ஹரிதாசின் தந்தை என மூவரும் சேர்ந்து ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்தில் திண்டிவனத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் வந்து கொண்டிருந்தபோது இவர்களின் இருசக்கர வாகனம் திடீரென நிலை தடுமாறியதில் மூவரும் சாலையில் சிதறி விழுந்தனர். அப்போது பின்னால் வந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து சாலையில் விழுந்த சந்தியா மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்தில் ஹரிதாசுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அதேபோல் அவரது தந்தை அய்யனாரப்பனுக்கு காலில் எலும்பு முறிவுடன் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த ஹரிதாஸ் மற்றும் அய்யனாரப்பன் ஆகியோர் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.