மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதுக்கோட்டையில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்.! எதிரே வந்த வாகனத்தின் டயர் வெடித்ததால் ஏற்பட்ட பரிதாபம்.!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கடுக்காகாடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருச்சி மாவட்டத்திற்கு ஒரு திருமண நிகழ்வுக்காக காரில் சென்றுள்ளனர். அப்போது இன்று காலை 11 மணியளவில், புதுக்கோட்டை- திருச்சி நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபொழுது விபத்து ஏற்பட்டுள்ளது.
கைனாங்கரை பகுதியில்அவர்களது கார் வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு வாகனத்தின் டயர் வெடித்து தாறுமாறாக வந்து இவர்களது கார் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் அவர்கள் வந்த கார் சாலையை தாண்டி கீழே விழுந்து கவிழ்ந்தது. அந்த காரில் பயணம் செய்த கடுக்காகாட்டைச் சேர்ந்த ஆரோக்கிய மலர்விழி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த இனிகோமேரி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த அருள்தாஸ் என்பவர் பலத்த காயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.