மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னை - டெல்லி செல்லும் விமானத்தை தள்ளி செல்லும் போது விபத்து... சென்னை ஏர்போர்ட்டில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!
சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்படுவதற்காக தயாராக நின்ற விமானம் ஒன்று நடைபாதையிலிருந்து ஓடு பாதைக்கு தள்ளிச் செல்லும் போது விமானத்தில் கம்பி உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து 138 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 144 பேருடன் டெல்லி நோக்கி தயாராக இருந்த விமானம் ஒன்று நடைப்பாதையிலிருந்து ஓடு பாதைக்கு தள்ளி செல்லும் போது திடீரென இழு விமானத்தில் இருந்த கம்பி உடைந்து விமான சக்கரத்தில் சிக்கியுள்ளது.
உடனே விமானத்திலிருந்து பயணிகள் கீழே இறக்கப்பட்டனர். என்ஜினியர்கள் வரவழைக்கப்பட்டு விமானத்தை ஆய்வு செய்ததில் விமானத்தில் மாட்டிய சக்கரத்தை அகற்றினால் மட்டுமே விமானத்தை நகர்த்த முடியும் என்று கூறியுள்ளனர்.
அதனையடுத்து அவசரமாக செல்லும் பயணிகள் மட்டும் மற்றும் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த சென்னை விமான நிலைய ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.