கருங்காலி மாலையால் ஏற்பட்ட விபரீதம்.. இளைஞர் மீது ஆசிட் வீச்சு!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கொம்பு காரனேந்தல் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் கருங்காலி மாலை வாங்கிய போட வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். இதற்காக கடந்த வெள்ளிக்கிழமை மானாமதுரை காந்தி சிலை பின்புறம் உள்ள நகை பட்டறை உரிமையாளரை சந்தித்து தனக்கு கருங்காலி மாலை செய்து தரும்படி முன்பணமும் கொடுத்து ஆர்டர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து 2 நாட்கள் கழித்து வர சொன்னதால், கருங்காலி மாலையை வாங்க விஜயகுமார் தனது நண்பர் சதீஷ்குமார் நேற்று மானாமதுரை சென்றுள்ளார். இதில், கருங்காலி மாலை தருவது தொடர்பாக உரிமையாளருக்கும், விஜயகுமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த நகைக்கடை உரிமையாளர் விஜய் மார்த்தாண்டன் கடையில் வைத்திருந்த ஆசீட் பாட்டிலை விஜயகுமார் மீது தூக்கி எறிந்தார். இதில் சதீஷ்குமாரின் உடலில் ஆசிட் பட்டதால் படுகாயமடைந்த நிலையில் அலறிடித்து ஓடினார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சதீஷ்குமாரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் நகைக்கடை உரிமையாளர் விஜய் மார்த்தாண்டனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.