மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்ன ஆச்சு?? திடீரென நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..
நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக் குறைவால் சென்னை அமைந்தகரையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன், அதிரடிப்படை போன்ற பல்வேறு வெற்றிப்படங்கள் இவரது நடிப்புக்கு உதாரணமாக கூறலாம். பல்வேறு படங்களில் நடித்துள்ள மன்சூரலிகான் தற்போது சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியலில் இறங்கிவிட்டார்.
சமீபத்தில் நடந்துமுடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட மன்சூர் அலிகான் தான் போட்டியிட்ட தொகுதியில் மொத்தம் 428 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தார்.
இந்நிலையில் இன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை அமைந்தகரையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் மன்சூர் அலிகான் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கிட்னியில் பெரிய சைஸ் கல் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.