திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தமிழக முதல்வரிடம் நடிகர் நெப்போலியன் சார்பில் கொடுக்கப்பட்ட கொரோனா நிவாரண நிதி.! தொகை எவ்வளவு தெரியுமா.?
தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திலும் கொரோனா அதிதீவிரமாக பரவி நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படும், நூற்றுக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் உயிரிழந்தும்வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இரண்டாவது அலையாக அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையால் மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை போன்றவை ஏற்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில்கொரோனா நிவாரண பணிகளுக்கு பெருமளவில் நிதி தேவைப்படுகிறது. இதனைத்தொடர்ந்து முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் நிவாரண நிதிகளை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் தமிழக அரசிற்கு நிதியுதவி வழங்கியுள்ளார். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் தலைமைச் செயலகத்தில் நெப்போலியன் அவர்களின் சார்பாக ஜீவன் டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜீவன் அறக்கட்டளை சார்பாக ரூபாய் 25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கியுள்ளனர்.