மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜப்பானிய மொழியில் வெளியாகும் சலார் திரைப்படம்: அசத்தல் தகவல் இதோ.!
டிசம்பர் 22 அன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியான திரைப்படம் சலார் (Salaar). இப்படத்தில் பிரபாஸ், ஜெகபதி பாபு, பிரித்விராஜ் சுகுமாரன், சுருதிஹாசன், மைம் கோபி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்திருந்தனர்.
பிரசாந்த் நீல் படத்தை இயக்கி இருந்தார், ரவி பஸ்ரூர் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு இருந்தார். படம் திரையரங்கில் வெளியாகி ரூ.700 கோடியை கடந்து வசூல் செய்தது.
இந்நிலையில், ஜப்பானின் ட்வின் மூவிஸ் நிறுவனம், சலார் படத்தை ஜப்பானிய மொழியில் வெளியிடுகிறது. இதற்கான பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், கோடை காலத்தின் போது ஜப்பானில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய திரைப்படங்களுக்கு ஜப்பானில் கிடைக்கும் வரவேற்பு தொடர்ந்து அதிகரிப்பதால், அப்படங்களை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிடுவது சமீபத்தில் அதிகரித்துள்ளது.