திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகை ராஷ்மிகாவிற்கு இவ்வளவு குட்டி தங்கையா?? வயசு வித்தியாசம் எவ்வளவு பார்த்தீங்களா!!
கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா. தொடர்ந்து அவர் தெலுங்கில் கீதா கோவிந்தம், மை டியர் காம்ரேட் போன்ற படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் அவர் தமிழில் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார்.
திரையுலகை கலக்கும் நடிகை ராஷ்மிகா
தொடர்ந்து அவர் புஷ்பா, விஜய்யுடன் வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருகிறார்.மேலும் நடிகை ராஷ்மிகா பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து அனிமல் படத்தின் மூலம் பிரபலமானார். அவர் தற்போது சல்மான்கானுக்கு ஜோடியாக சிக்கந்தர் மற்றும் தனுசுக்கு ஜோடியாக குபேரா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: 16 வயது மகளுடன் வசித்துவந்த கைம்பெண் பலாத்காரம்; உடலெல்லாம் கடித்து கொடூரம்.. கயவனுக்கு மாவுக்கட்டு.!
ராஷ்மிகாவின் தங்கை
பிஸியான நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகாவுக்கு ஷிமன் மந்தனா என்ற தங்கை உள்ளாராம். இவர்கள் இருவருக்கும் இடையே 17 வயது வித்தியாசம் என கூறப்படுகிறது. ராஷ்மிகா பள்ளிப்படிப்பை முடிக்கும் சமயத்திலேயே அவரது தங்கை ஷிமன் பிறந்தாராம். ராஷ்மிகா அவரது தங்கையுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.