மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிமுக முன்னாள் எம்எல்ஏ செய்யும் காரியமா இது; சிறுமி பரபரப்பு வாக்குமூலம்.!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் அருகே கோட்டார் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி திடீரென அவரது வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காத நிலையில் அந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் அவரை தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டனர்.
போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கிய அந்த சிறுமி காதலனுடன் தஞ்சம் அடைந்து இருப்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. அதாவது அந்த சிறுமியின் தாயாருக்கும் நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
அந்த தொடர்பை பயன்படுத்தி எம்எல்ஏவும் மேலும் சிலரும் பலநாள் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர் என்று சிறுமி தெரிவித்துள்ளார். இதனை தனது தாயார் கண்டுகொள்ளாததால் தனது காதலருடன் சென்றதாகவும் சிறுமி தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் நாஞ்சில் முருகேசன், சிறுமியின் தாய், காதலன் உட்பட நான்கு பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முன்னாள் எம்எல்ஏ மற்றும் சிறுமியின் தாயை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையடுத்து அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நாஞ்சில் முருகேசனை அதிமுக நீக்கியுள்ளது.